மூன்றாவது முறையாக ஜோடி சேரும் ஆதி-நிக்கி கல்ராணி.!

It has been announced that Aadhi and Nikki galrani will be teaming up for the third time for the film sivudu.

ஆதி மற்றும் நிக்கி கல்ராணி சிவுடு எனும் படத்திற்காக மூன்றாவது முறையாக ஜோடி சேர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆதி .மிருகம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ஈரம், அய்யனார், ஆடுபுலி,அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களிலும நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் . தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பிஸியாக நடித்து வரும் இவரது புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவுடு என்று பெயரிடப்பட்டுள்ள தெலுங்கு படத்தில் ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கவுள்ளார் .இந்த படத்தினற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை நிக்கி கல்ராணி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.ஏற்கனவே ஆதி – நிக்கி கல்ராணி இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

unknown node