ஜெயிலர் படம் பார்க்க சென்னை வந்த ஜப்பான் ஜோடி!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் இன்று உலக முழுவதும்  வெளியானது. தமிழகம் உட்பட வடமாநிலங்களிலும் விடிய காலை முதலே ரசிகர்கள் பட்டாசு

japanese - Jailer

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படம் இன்று உலக முழுவதும்  வெளியானது. தமிழகம் உட்பட வடமாநிலங்களிலும் விடிய காலை முதலே ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை FDFS காண ஆரவாரத்துடன் திரையரங்குகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ஜப்பானில் இருந்து இருந்து படம் பார்க்க ஒரு தம்பதி சென்னைக்கு வந்தனர். அவர்கள் தமிழில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்கள் பேசுகையில், முத்து படம் முதல் தற்போது வரை 20 ஆண்டுகளாக தலைவரை பார்த்து வருகிறோம் என்று தெரிவித்தனர். ரஜினி படத்திற்கு உலக ரசிகர்கள் இந்த அளவிற்கு ஆர்வம் காட்டுவது புதுசு அல்ல.

ஜெயிலர்:

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார், தமன்னா, மிர்னா மேனன், மோகன்லால், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.