ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeஇந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
unknown node1950-களில் பத்திரிகைத் தொடராக வெளி வந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
unknown nodeஇந்த நிலையில் தற்போது படத்திற்கான டீசர் வெளியீட்டுள்ளது. டீசரில், மிகவும் பிரமாண்டமான முறையில், எடிட் செய்து ஒவ்வொரு அரசர்கள், மற்றும் ராணிகளை சிறப்பாக காமித்துள்ளனர். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்துள்ள பின்னணி இசை ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. இதுவரை தமிழ் சினிமாவில் இந்த அளவிற்கு ஒரு பிரமாண்டம் இருக்கிறதா என்கிற அளவிற்கு அருமையாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதோ அந்த சூப்பர் டீசர்…
unknown node