வேற லெவல் சிவா...சாய்...அமரன் படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல திகில் இயக்குநர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படத்தினை பார்த்துவிட்டு இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

amaran movie

சென்னை :இந்த ஆண்டு அமரன் தீபாவளி தான் என்கிற வகையில், படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பு பற்றியும் நடிகை சாய் பல்லவி நடிப்பு பற்றியும் தான் பலரும் பெருமையாகப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களைப் போலப் பிரபலங்கள் பலரும் படத்தினை பார்த்துவிட்டு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், டிமாண்டி காலனி 1,2 ஆகிய திகில் படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து படத்தினை பார்த்துவிட்டு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பு பற்றியும், சாய் பல்லவி நடிப்பு பற்றியும் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” அமரன் இது ஆத்மார்த்தமான திரைப்படம். படத்தைப் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி பெரிய வெற்றிக்குத் தகுதியான ஒரு நபர். அண்ணன் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பு படத்தில் நம்மளுடைய மனதை வருடுகிறது.

இந்த படத்திற்குத் தேவையான பின்னணி இசையை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அழகாகக் கொடுத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக நான் படக்குழுவுக்கு இந்த நேரத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் இன்னும் வரவேற்பைப் பெற இன்னும் கொஞ்ச நாட்கள் எடுக்கும்” எனவும் இயக்குநர் அஜய் ஞானமுத்து பாராட்டியுள்ளார்.

unknown node

இமைக்கா நொடிகள், டிமாண்டி காலனி 1, கோப்ரா, போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து அமரன் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கச் செய்துள்ளது.