நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான காஞ்சனா-3 பல திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. மேலும், இப்படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ரீமேக் இந்தியில் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு லட்சுமி பாம் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், நடிகர் லாரன்சுக்கு பதிலாக இப்படத்தில் அக்சய் குமார் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.
இப்படத்தில், சரத்குமார் வேடத்தில், அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகவும், மேலும், இப்படத்திற்காக பல வருடங்களாக வைத்திருக்கும் அவரது குறுந்தாடியை எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.