திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய நன்றி – விஷால்..!

He thanked Vishal on his Twitter page for the excellent response to the film Chakra which was released yesterday

நேற்று விஷால் நடிப்பில் வெளியான சக்ரா படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதால் தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா . இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் விஷால் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் 4 மொழிகளில் நேற்று திரையரங்குகளில் வெளியானது, வெளியானத்திலிருந்து மக்களுக்கு மத்தியில் ஒரு சிறப்பான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஷால் அனைவர்க்கும் நன்றி தெரிவித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

இந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பது, “திரையரங்குகளுக்கு திரும்பி வரும் பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய நன்றி. எல்லா மொழிகளிலும் சக்ராவுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியிடுவதற்கான போராட்டங்களிற்கு மதிப்பு. படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், போன்ற அனைவர்க்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

unknown node