இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஸ்னு விஷால் – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான திரைப்படம்“கட்டாகுஸ்தி”.வித்தியாசமான காமெடி கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
unknown nodekatakusthi[Image Source: Google]
கடந்த 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் இரண்டாவது வரமாக வசூலை குவித்து வருகிறது. அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 12 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
unknown nodekatakusthi[Image Source: Google]
ஆம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் 12 நாட்களில் 9 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இரண்டு வரங்களை கடந்தும், இன்னும் 26 மாவட்டங்களில் 61 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.
இதையும் படியுங்களேன்-ரொம்ப வருத்தம்….இதுதானால் தான் என்னுடைய திருமணம் நின்றது….மனம் திறந்த விஷால்.!
unknown nodekatakusthi-[Image Source: Google]
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 9 கோடி வசூல் செய்துள்ளது சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு படத்திற்கு கதை இருந்தால் கண்டிப்பாக வெற்றிபெறும் என்பது தெரியவந்துள்ளது.