வெறும் இரண்டு நாளில் ரூ.296 கோடி வசூல் செய்த 'சலார்' திரைப்படம்.!

கேஜிஎப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். 270 கோடி

Salaar

கேஜிஎப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். 270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர் என்பவர் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி, ஜெகபதி பாபு, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

இந்த சலார் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.178 கோடி வசூல் செய்தது. இதையடுத்து இரண்டாம் நாள் வசூல் குறித்தும் வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டாம் நாளான நேற்று ரூ.117 கோடி வசூலித்துள்ள நிலையில்,  இப்போது உலகம் முழுவதும் ‘சலார்’ படத்தின் மொத்த வசூல் ரூ.295.7 கோடியாக உள்ளது.

வசூலில் வேட்டை நடத்தும் சலார்! முதல் நாளில் மட்டும் இத்தனை கோடிகளா?

தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சன படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னுமே அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

unknown node

இந்த வசூலை வைத்து பார்க்கும்போது படத்தின் மொத்த பட்ஜெட்டையும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வசூலித்துவிடும் என்று தெரிகிறது. படத்தில் நடிகர் பிரபாஸுக்கு மட்டும் சம்பளமாக ரூ.100 கோடி மற்றும் லாபத்தில் 10% பங்கு என கூறப்படுகிறது.