இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்பொழுது நடிக்க உள்ள திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாவதாக லைக்கா நிறுவனம் காலையில் அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கேப்டன் மில்லர் படத்தில் லோகேஷ் கனகராஜ் மாநகரம், உள்ளிட்ட படங்களில் நடித்த சுந்தீப் கிஷன் இணைந்துள்ளார். இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.
unknown node