காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புது வீடு வாங்கியுள்ளதாக நடிகை பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்யுடன் பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில், கலக்கி கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தனது 14 ஆண்டு காதலரை புகைப்படங்களை வெளியீட்டு அறிவித்துள்ளார். கடற்கரையில் காதலர் முத்தம் கொடுப்பது போல அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodePriya Bhavani Shankar Lover [Image Source: Twitter ]
இந்த செய்தி மட்டுமின்றி, மற்றோரு சந்தோச செய்தியாக புதிதாக வீடு வாங்கியுள்ளதையும் சேர்த்து அறிவித்துள்ளார். இது குறித்து பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாவில் “18 வயதில் ஆசைபட்டு, தற்போது நமது புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்-படப்பிடிப்பில் தனுஷை அடித்த செல்வராகவன்… ! அதிர்ச்சி சம்பவத்தை கூறிய பிரபல இயக்குனர்…
unknown nodePriya Bhavani Shankar Lover [Image Source: Twitter ]
இதனால் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறப்போகிறதா..? என ரசிகர்கள் குழம்பினார். அதற்கும் விளக்கம் கொடுத்த பிரியா இது புதுமனை புகுவிழா நிகழ்ச்சிதான் என தெளிவுபடுத்தியுள்ளார்.ஒரே நேரத்தில் இரண்டு சந்தோஷமான செய்தியை சொன்ன பிரியா பவானி சங்கருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
மேலும் நடிகைபிரியா பவானி சங்கர் தற்போது இந்தியன் 2, பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட பெரிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.