இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில்நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, அனந்த் நாக் ,சஞ்சய் தத், அச்யுத் குமார், ரவீனா டாண்டன், மாளவிகா அவினாஷ், ஐயப்ப பி சர்மா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
unknown nodeபடத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்தது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை நிகழ்த்தியது என்றே கூறலாம்.
unknown nodeமுதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகள் அனைத்தும் காண்போரை வெகுவாக ஈர்த்தது. படத்தில் யாஷ் நடித்த ராக்கி பாய் கதாபாத்திரத்திற்கு என்று தனி ரசிகர்களே உருவாகிவிட்டனர். திரையரங்குகளில் வெற்றியடைந்ததை தொடர்ந்து நாளை படம் அமேசான் பிரேம் வீடியோவில் வெளியாகவுள்ளது.
unknown nodeஇந்த நிலையில் படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகி, இன்னும் பல திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கிறது. நாளை படம் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், 10 நாடுகள் மற்றும் 390 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.
Celebrating this monstrous milestone ????#KGFChapter2 @TheNameIsYash @prashanth_neel @VKiragandur @hombalefilms @HombaleGroup @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @prabhu_sr #KGF2Blockbuster50Days pic.twitter.com/zUuPSV4lsj
— DreamWarriorPictures (@DreamWarriorpic) June 2, 2022