தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் சிறுத்தா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கினார். ராம்சரணுடன் நேஹா சர்மா, பிரகாஷ்ராஜ், அலி, ஆஷிஷ் வித்யார்த்தி, பரமானந்தம் நடித்திருந்தார்கள். மணிசர்மா இசை அமைத்திருந்தார். ஷியாம் கே.நாயுடு ஒளிப்பதிவு செய்திருந்தார்.இந்தப் படம் சரியாக போகவில்லை. இதற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மகதீரா படம் தான் ராம் சரணை பெரிய நட்சத்திரமாக்கியது. இப்போது ராம்சரணின் சிறுத்தா படத்தை 10 வருடங்களுக்கு பிறகு தமிழில் டப் செய்து வருகிறார்கள். தமிழ் வசனம் மற்றும் பாடல்களை ஏஆர்கே ராஜராஜா எழுதுகிறார். பி.கே.ஸ்டூடியோ சார்பில் கே.கோகேஷ்தத் வெளியிடுகிறார். சிறுத்தை வேட்டை என்று தமிழில் தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு முன்பு ராம் சரண் அறிமுகம் ஆன படம் தமிழில் பாயும் சிறுத்தையாக....!
தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் சிறுத்தா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கினார்.
unknown node