ஆதிபுருஷ் திரைப்படத்தின் 10,000 டிக்கெட்டுகள் இலவசம்.!

ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன் மற்றும் சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ஜூன் 16 அன்று 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

Adipurush

ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன் மற்றும் சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ஜூன் 16 அன்று 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சைஃப் அலி கான் வில்லனாக நடிக்கிறார், இதில் தேவதத்தா நாகே மற்றும் சன்னி சிங் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம், இந்திய புராணக் கதையான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் பற்றி பேச்சுக்கள் அதிகமாக உள்ளது. சமீபத்தில், ‘ஆதிபுருஷ்’ திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளில் அனுமருக்கு ஒரு இருக்கை காலியாக விடப்படும் என்ற படக்குழுவினர் அறிவித்ததுள்ளனர்.

தற்போது, ஆதிபுருஷ் படத்தின் 10,000 டிக்கெட்டுகளை அரசு பள்ளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக ‘The Kashmir Files பட’ தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ‘தெலுங்கானா முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகள். முதியோர் இல்லங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு தெய்வீக சினிமா அனுபவத்தை அளிக்க உள்ளேன்’ என்றார்.

unknown node