தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்…கடும் சரிவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், பெண்கள் கூட்டம் கூட்டமாக நகை வாங்க செல்கின்றனர்.
அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென்று சரிந்துள்ளது. அது மட்டும் இல்லை, இந்த வார தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, சென்னையில் (09.11.2023) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,615க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.76.20க்கும் கிலோவுக்கு ரூ.76,500க்கும் விற்பனையாகிறது.
(08.11.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.ரூ.45,280க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து குறைந்து ரூ.76.50க்கும், கிலோவுக்கு ரூ.76,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025