கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே,

gold price

தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்று சற்று குறைந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்த இரு நாட்களாக தங்கத்தின் விலை சரிவை கண்டு வந்த நிலையில்,  இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

(26.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.45,600க்கும், கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.5,700 க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.88.00க்கும், கிலோ வெள்ளி ரூ.88,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

(25.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,240க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,655 க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.87.50க்கும், கிலோ வெள்ளி ரூ.87,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.