தங்கம் விலை குறைந்தும்...இல்லத்தரசிகள் சோகம்.! இன்றைய நிலவரம் இதோ....

Gold Price: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக

Gold Price [file image]

Gold Price:சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக உச்சத்தில் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.520 குறைந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.

கடந்த சில நாட்களில் தங்கம் விலையானது வரலாறு காணாத அளவிற்கு உச்சம் தொட்ட நிலையில், இன்றைய நாளில் சற்று தங்கம் விலை குறைந்துள்ளது. இப்படி கடலென அதிகரித்துவிட்டு, சிறிதளவு குறைந்ததும் இல்லத்தரசிகள் முகத்தில் சோகம் மட்டுமே காணப்படுகிறது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (15-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.520 குறைந்து ரூ.54,320க்கும், கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6,790க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50க்கும், கிலோ வெள்ளி ரூ.89,500க்கும் விற்பனையாகிறது

அதன்படி பார்க்கையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி (14-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,840-க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,855-க்கும் விற்பனையானது. அதே நேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 89க்கும், ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.