மீண்டும் அதிகரித்த தங்கம் விலை...இன்று சவரனுக்கு ரூ.280 உயர்வு.!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே,

Hero Image

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. தங்கம் விலை அதிரடியாக இன்று உயர்ந்துள்ளது, அதன்படி ஒரு சவரன் ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று (22. 12. 2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 46,880 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,860-க்கு விற்பனையாகிறது. அதேவேளை, வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 81 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.81,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.39 குறைவு..!

சென்னையில் நேற்று (21. 12. 2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,460க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,825க்கும் விற்பனையானது. அதேவேளை, வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசு உயர்ந்து ரூ.80.70க்கும், கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ.80,700க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.