மீண்டும் உயர்ந்த தங்கம் விலை...சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு!

இன்றைய நாள் தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும்

gold price

இன்றைய நாள் தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

அந்த வகையில், ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.47 ஆயிரத்தை தாண்டியதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுவும் மாத தொடக்க நாளான நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில், இன்றும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (02. 02. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,120-க்கும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,890க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.78.00க்கும், கிலோ வெள்ளிரூ.77,800க்கும் விற்பனையாகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை மறைமுகமாக தொடங்கிய தேமுதிக..?

சென்னையில் நேற்றைய தினம் (01. 02. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,040-க்கும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,880க்கும் விற்பனையானது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.77.80க்கும், கிலோ வெள்ளி ரூ.200 குறைந்து ரூ.77,800க்கும் விற்பனை செயப்பட்டது குறிப்பிடத்தக்கது.