வாரத்தின் முதல் நாளில் சரிவை நோக்கி பயணம்.! சென்செக்ஸ் 165 புள்ளிகள் சரிவு.!

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. அதன்படி, சென்செக்ஸ் 200 புள்ளிகள் முதல் 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமானது நடைபெற்றது. இருந்தும் இந்த வாரத்திலாவது பங்குச்சந்தை ஏற்றமடையும் என்று முதலீட்டாளர்கள் நினைத்திருந்தனர்.
அதன்படி, பங்குச்சந்தை 2 முதல் 5 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. ஆனால் தற்போது சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அந்தவகையில், இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று 65,419 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 165.92 புள்ளிகள் சரிந்து 65,231.70 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 69.35 புள்ளிகள் உயர்ந்து 19,473.30 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இவ்வாறு பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைவதற்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது.
தற்போது, பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.01 டாலர் விலை குறைந்து 91.15 டாலராக விற்பனையாகி வருகிறது. மேலும், சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 126.00 அல்லது 1.71% குறைந்து ரூ.7,240 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.
இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025