இல்லத்தரசிகளுக்கு ஷாக்: ஒரு சவரன் தங்கம் விலை ரூ.47,000த்தை தொட்டது!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே,

gold rate today

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் ரூ.47,000ஐ எட்டியதால், வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று (23. 12. 2023)  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.47,000க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,875க்கும் விற்பனையாகிறது. அதேவேளை, ஒருகிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ரூ. 80.50க்கும், கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.80,500க்கும் விற்பனையாகிறது.

சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவு! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நேற்று (22. 12. 2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 46,880 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,860-க்கு விற்பனையானது. அதேவேளை, வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 81 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.81,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.