ஸ்கூட்டர்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்றது. சிட்டி ட்ராபிக்கில் சட்டென கிளம்ப ஏதுவாக இருப்பதால், ஸ்கூட்டர் மோகம் சிட்டி பசங்களிடம் அதிகமாக பரவி வருகிறது. மேலும் பைக்குகளின் திறனுக்கு இணையான திறனை கொடுப்பதால் பெரிய பைக்குகளுடன் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை ஆகிறது.இதனை தொடர்ந்து இளைஞர்களிடம் பிரபலமடைந்த யமஹா நிறுவனமும் தனது பங்கிற்கு கியர்பைக்குகளுக்கு போட்டியாக 155சிசி திறன் கொண்ட யமஹா என்மேக்ஸ் 155சிசி ஸ்கூட்டரை களமிறக்கி உள்ளது. இவை இந்தாண்டு துவக்கத்லில் சென்னையில் காட்சிக்கு வைக்கப்பட்டது.இவை லிக்யூட் கூல் 4 வால்வ் என்ஜின்களோடு 14.8PS ஆற்றலுடன் 8,000rpm ஆற்றலுடனும், 14.4Nm ஆற்றலடன் 6,000rpm இல் இயங்கும். இதில் ஏபிஎஸ் டிஸ்க் பிரேக், கொண்டதாக இருக்கும். இந்த ஸ்கூட்டர் முதலில் பிலிபைன்ஸ் நாட்டில் 1.5லட்சம் (இந்திய ரூபாய்) மதிப்புடையது. எனவே இந்தியாவில் வெளியாகும் போது அதற்கேற்ப்ப மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
DINASUVADU