பல்சர் ரக பைக் மூலம் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது, பஜாஜ் நிறுவனம். இந்த நிறுவனம் 2016ஆம் ஆண்டு தனது 400 சிசி பைக்கான டோமினார் 400 ரக பைக்கை அறிமுகம் செய்தது. டோமினார், பஜாஜ் நிறுவனத்தின் அதிக சக்தி வாய்ந்த பைக்காக விளங்குகிறது. குறிப்பாக இந்த பைக்கை லாங்கு ரைடு (Long ride) செல்வோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஆரம்பத்தில் இதன் விலை 1.36 லட்சமானாலும், தற்பொழுது இந்த பைக்கின் விலை 1.90 லட்சமாகும்.
unknown nodeஇந்த நிலையில், குறைந்த பவரில் டோமினார் பைக்குகளை வழங்க பஜாஜ் நிறுவனம் முன்வந்துள்ளது. இதனையடுத்து இந்த பைக், 250 ரக சிசியில்டோமினார் 250என்ற பெயரில் பிஎஸ்-6 என்ஜினுடன் வெளிவரவுள்ளது.
unknown nodeஇந்த பைக்கின் என்ஜினை பொறுத்தளவில், கேடிஎம் ட்யூக் 250யில் உள்ள என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த என்ஜின், 249 சிசி சிங்கள் சிலிண்டர் என்ஜினில் அதிகபட்சமாக 30 BHP பவரையும், 24 NM டார்கை 6500 ரெவால்யூஷனில் வெளியிடும். ஆனால் பஜாஜை பொறுத்தளவில், இதைவிட சற்று குறைவான திறனை பயன்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பைக்கின் விலையை குறைக்கும் நோக்கத்துடன், ஸ்விங் ஆர்ம் போன்ற ப்ரீமியம் உதிரிபாகங்களில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் டயர் அளவு, டோமினார் 400ஐ விட சிறிதாக இருக்கும். டோமினார் 400ல் அப்ஸைட் டவுன் போர்க்குகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், 250யில் டெலெஸ்கோபிக் போர்க்குகள் இடம்பெறுகின்றன. மேலும், இதில் டோமினார் 400ல் இடம்பெற்ற அதே ஹெட்லம்ப்ஸ் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் அடங்கும்.
unknown nodeஇந்த பைக், இந்த மாதம் வெளிவரும் எனவும், ஏப்ரல் மாதம் இதன் டெலிவரி தொடங்கிவிடும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை, 1.45 லட்சம் முதல் 1.60 லட்சம் வரை வரும் எனவும் கூறி வருகின்றனர். லாங் ரைடை விரும்போவோருக்கு டோமினார் 400ஐ போலவே இந்த பைக்கும் சிறப்பாக அமையும்.