200 கி.மீ மைலேஜ் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ரூ.1 லட்சத்திற்குள் 3 சிறந்த சாய்ஸ் எது?

ஏத்தர் கோனார்க், ஓலா S1 X, டிவிஎஸ் iQube ஆகிய 3 ஸ்கூட்டர்களில் விலை, ரேஞ்ச், பேட்டரி வாரண்டி உள்ளிட்ட விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Hero Image

டெல்லி : இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல் விலை விறுவிறுவென ஏறிக்கொண்டே போவதால், நடுத்தர மக்களின் கவனம் முழுவதும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பக்கமே திரும்பியுள்ளது. அதுவும் ஒரே ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வண்டிகளை சந்தையில் மக்கள் அதிகமாக தேடி கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், கம்மி பட்ஜெட்டில் அப்படி ஒரு வண்டியைத் தேடினால் ஆப்ஷன்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்தச் சூழலில் வாடிக்கையாளர்களைக் கவர ஏத்தர், ஓலா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் தங்களின் பட்ஜெட் ரக வண்டிகளுடன் களமிறங்கியுள்ளன. இந்த மூன்று வண்டிகளில் என்னென்ன சிறப்புகள் உள்ளன, யாருக்கு எது பெஸ்ட் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஏத்தர் கோனார்க்

எலக்ட்ரிக் வண்டி தயாரிப்பில் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்ற ஏத்தர் நிறுவனம், சமீபத்தில் அதிரடியாக "ஏத்தர் கோனார்க்" (Ather Konark) ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை வெறும் 99,999 ரூபாய் மட்டுமே. இந்த பட்ஜெட்டிலேயே சிங்கிள் சார்ஜில் 200 கிலோமீட்டர் மைலேஜ் தரும் வசதியை ஏத்தர் கொடுத்துள்ளது.

Ather Konarc Electric Scooter Launched.webp

இந்த வண்டியின் மிகப்பெரிய ஹைலைட்டே இதனுடைய பேட்டரிக்கு வழங்கப்படும் 10 ஆண்டுகள் வாரண்டிதான். எலக்ட்ரிக் வண்டி வாங்க பயப்படுபவர்களின் மிகப்பெரிய கவலையான பேட்டரி மாற்றுச் செலவுக்கு, இந்த 10 வருட வாரண்டி ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது. இதுமட்டுமில்லாமல், சௌகரியமான நகர்ப்புறப் பயணத்திற்காக எலக்ட்ரானிக் பிரேக்கிங், சாவி இல்லாத மேஜிக் கீ, ஆட்டோபாப் மற்றும் ஏர்வாக் போன்ற எக்கச்சக்க நவீன வசதிகளும் இதில் நிறைந்துள்ளன.

ஓலா எஸ்1 எக்ஸ்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் விலையைக் குறைத்து அதிரடி காட்டுவதில் ஓலா நிறுவனம் எப்போதுமே முன்னணியில் இருக்கும். அந்த வரிசையில் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்காகக் கொண்டு வரப்பட்டதுதான் (Ola S1) ஓலா எஸ்1 எக்ஸ். இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை சுமார் 84,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதன் பெரிய பேட்டரி கொண்ட டாப் வேரியண்ட்டில் அதிகபட்சமாக 242 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும் என்று ஓலா தரப்பில் சொல்லப்படுகிறது.

Ola S1.webp

ஆனால், இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், 84,999 ரூபாய் ஆரம்ப விலையில் கிடைக்கும் எல்லா வேரியண்ட்களும் 200 கிலோமீட்டர் மைலேஜ் தராது. உங்களுக்கு 200 கிலோமீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வேண்டும் என்றால், பெரிய பேட்டரி கொண்ட டாப் வேரியண்ட்டைத்தான் காசு கொடுத்துத் தேர்வு செய்ய வேண்டும். இருந்தாலும், ஒரு லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் வண்டியாக இது வலம் வருகிறது.

டிவிஎஸ் ஐகியூப்

உங்களுக்கு 200 கிலோமீட்டர் மைலேஜ் என்பது கட்டாயத் தேவை இல்லை என்றால், நீங்கள் தாராளமாக டிவிஎஸ் ஐகியூப் (TVS iQube) ஸ்கூட்டரைத் தேர்வு செய்யலாம். இதன் ஆரம்ப விலை சுமார் 1.11 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் ஐகியூப் மில்லியன்ஆர் எடிஷன் (MillionR Edition) மாடலானது 3.5 கிலோவாட் பேட்டரியுடன் வந்து, சிங்கிள் சார்ஜில் 145 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது.

TVS iQube.webp

தொழில்நுட்ப ரீதியாக இது 200 கிலோமீட்டரைத் தொடவில்லை என்றாலும், டிவிஎஸ் நிறுவனத்திற்கு இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் மிக வலுவான சர்வீஸ் நெட்வொர்க் உள்ளது. ஏற்கனவே பத்து லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த வண்டியை வாங்கிப் பயன்படுத்தி வருவததால், தினசரி குடும்பப் பயன்பாட்டிற்கும் நம்பகத்தன்மைக்கும் இந்த ஸ்கூட்டர் ஒரு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

இந்த மூன்றில் யாருக்கு எது பெஸ்ட்?

இந்த மூன்று ஸ்கூட்டர்களில் யாருக்கு எந்த வண்டி மிகச்சரியான தேர்வாக இருக்கும் என்று பார்ப்போம். உங்களுக்கு டிவிஎஸ் பிராண்டின் மீதும் அவர்களின் சர்வீஸ் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து, மைலேஜை விட வண்டியின் உழைப்பும், குடும்பத்துடன் தினசரி நிம்மதியாகப் பயணிப்பதும்தான் முக்கியம் என்று நினைத்தால் நீங்கள் தாராளமாக டிவிஎஸ் ஐகியூப் (TVS iQube) மாடலைத் தேர்வு செய்யலாம்.

அதே சமயம், உங்களது பட்ஜெட் மிகவும் குறைவு, ஒரு லட்சத்திற்கும் மிகக் குறைந்த ஆரம்ப விலையிலேயே எனக்கு அதிகப்படியான மைலேஜ் ஆப்ஷன் வேண்டும் என்று ஆசைப்பட்டால், நீங்கள் ஓலா எஸ்1 எக்ஸ் (Ola S1 X) பக்கம்போகலாம்.

ஆனால், நீங்கள் வண்டியின் தரம், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நீண்ட காலப் பாதுகாப்பு என எல்லாவற்றையும் எதிர்பார்ப்பவர் என்றால், உங்களுக்கு ஏத்தர் கோனார்க் (Ather Konarc) தான் தற்போதைய சந்தையில் மிகச்சிறந்த பெஸ்ட் சாய்ஸ். ஏத்தர் வழங்கும் 10 வருட பேட்டரி வாரண்டியும், 99,999 ரூபாய் விலையில் கிடைக்கும் 200 கிமீ மைலேஜும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் பணத்திற்கு நூறு சதவீதம் மதிப்புமிக்கது. மனநிம்மதியோடு நீண்ட நாட்களுக்கு உழைக்கக்கூடிய ஒரு ஆல்-ரவுண்டர் ஃபேமிலி ஸ்கூட்டர் வேண்டும் என்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஏத்தர் கோனார்க்கை தேர்வு செய்யலாம்.

200 கி.மீ மைலேஜ் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ரூ.1 லட்சத்திற்குள் 3 சிறந்த சாய்ஸ் எது?