ஃபுஜிபிலிம் இந்தியா நிறுவனம் X-H1 மிர்ரர்லெஸ் டிஜிட்டல்(Fujifilm india is an X-H1 Mirror Digital digital camera) கேமராவை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விலை ரூ.1,72,999( பேட்டரி கிரிப் & பாடி ) மற்றும் ரூ.1,49,999( பாடி மட்டும் )
unknown nodeX-H1 கேமராவில் 5 ஆக்சிஸ், ‘எடர்னா பிலிம் சிமுலேஷன்’(ETERNA Film Simulation) மற்றும் 5.5 ஸ்டாப்ஸ்( IBIS )அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஃபுஜிபிலிம் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹருடோ இவாடா கூறுகையில், இந்தியாவில் புரொபஷனல் போட்டோகிராபி அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கான சந்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திருமண நிகழ்வு, விளம்பரங்கள், ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், டிஜிட்டல் மீடியம்ஸ் ஆகியவற்றில் போட்டோகிராபியின் தேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் நவீன, மிகத் துல்லிய புகைப்படங்களைப் பெறுவது அத்தியாவசியமாகிறது.
unknown nodeஇந்தியாவில் X-H1 கேமரா புதிய மைல்கல்லாக இருக்கும். எதிர்பார்த்ததை விட அதிகப்படியான புரொபஷனல் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.