உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அடுத்தடுத்த தினங்களில் நடக்க இருப்பதால், விராட் கோலி எதில் விளையாடுவார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட விராட் கோலியை, சர்ரே ( surrey ) அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜுன் மாதம் முழுவதும் அந்த அணிக்காக கோலி விளையாட இருக்கிறார். அதே மாதத்தில், இந்தியா – அயர்லாந்து மோதும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும் விராட் கோலி பங்கேற்க உள்ளார்.
கவுண்டி கிரிக்கெட்டும் சர்வதேச போட்டியும் அடுத்தடுத்த தினங்களில் நடப்பதால், விராட் கோலி எந்த போட்டியில் விளையாடுவார் என்பது கேள்விக் குறியாகி இருக்கிறது.