தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீரசக்கதேவி ஆலய விழா 11ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, 10ம் தேதி மாலை 6 மணி முதல் 13ம் தேதி அதிகாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த முதல் பாளையக்காரரான வீரபாண்டிய கட்ட பொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வளாகத்தில் வீர சக்கதேவி ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் ஆலய விழாவில் கட்டபொம்மன் வம்சா வழியினர், ஜோதி ஊர்வலம் நடத்துவார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வாடகை வாகனங்கள் பாஞ்சாலங்குறிச்சி செல்லும் வழியில் 4 வழிச்சாலைக்கு மேல் அனுமதிக்கப்படாது. எனினும் திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு ஊர்வலங்களுக்கு தடை உத்தரவு பொருந்தாது