இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய அப்டேட் வந்த வண்ணம் உள்ளது, மேலும் தற்சமயம் அந்நிறுவனம் சார்பாக புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது அதன்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வசதிகள் வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மியூட் எனும் புதிய வசதி கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த மியூட் வசதியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதனைப் பயன்படுத்தி ஸ்டோரி ஒன்றிற்கு சிலரின் கருத்துக்கள் தேவை இல்லை என்றால் அவர்களை மிக எளிமையாக மியூட் செய்துவிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் உணர்வுகளை திறமையாக வெளிப்படுத்துவதை எமோஜிக்கள் மிகவும் எளிதாக்கியுள்ளன எனக் கூறினால் அது மிகையாகாது. அடுத்து ரியாக்ஷன்ஸ் (reactions)எனும் புதிய வசதி கொண்டுவரப்படும் என இன்ஸ்டாகிராம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் slow-mo எனும் வசதி கொண்டுவரப்படும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் குறைந்த வேகத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு நாட்காட்டி அடிப்படையில் ஸ்டோரிகளை பார்க்ககூடிய வசதியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை மாத்திரமின்றி சிறிய அளவிலான வீடியோ மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கு புதிய அப்ளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்ளிக்கேஷன் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.
தற்சமயம் வெளிவந்துள்ள FastSave for Instagram எனும் அப்ளிக்கேஷனைக்கொண்டு இனஸ்டாகிராம் வீடியோ, புகைப்படம் மற்றும் கோப்புகளை விரைவாக பதிவிறக்கம் செய்ய முடியும். அதன்பின்பு இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்த சில வழிமுறைகள் உள்ளது.
முதலில் FastSave for Instagram அப்ளிக்கேஷனை உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும், அதன்பின்பு உங்கள் இனஸ்டாகிராமில் இருக்கும் வீடியோ, புகைப்படம், கோப்புகள் போன்றவற்றின் URL-ஐ அந்த அப்ளிக்கேஷனில் உட்புகுத்தி எளிமையாக டவுண்லோடு செய்துகொள்ள முடியும்.