மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அதிரடி..!

மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு , ஐடியா நிறுவனத்தில் 100விழுக்காடு நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது குறித்துத் தொலைத்தொடர்பு அமைச்சகமே முடிவெடுக்க வேண்டும்

மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு , ஐடியா நிறுவனத்தில் 100விழுக்காடு நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது குறித்துத் தொலைத்தொடர்பு அமைச்சகமே முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஓடபோன் நிறுவனமும் ஐடியா செல்லுலார் நிறுவனமும் இணையத் திட்டமிட்டுள்ளன.

ஏற்கெனவே ஐடியா செல்லுலார் நிறுவனத்தில் 34விழுக்காடு வெளிநாட்டு முதலீடு உள்ளது. ஓடபோன் இந்தியா நிறுவனத்திலும் பிரிட்டனின் ஓடபோன் நிறுவனத்துக்குப் பெரும்பான்மைப் பங்குகள் உள்ளன. இவ்விரு நிறுவனங்களும் ஒன்றிணையும்போது வெளிநாட்டு முதலீடு ஐம்பது விழுக்காட்டுக்கு அதிகமாகிவிடும். தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடு 49விழுக்காடு வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

இதனால் ஐடியா ஓடபோன் நிறுவனங்களின் இணைப்புக்கு அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இது குறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு செய்தியாளர்களிடம் பேசும்போது ஐடியா நிறுவனத்தில் 100விழுக்காடு நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது குறித்துத் தொலைத்தொடர்பு அமைச்சகம் தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.