மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ,மாணவர்களுக்கு அழைப்புவிடுத்தார்..!

100 மணி நேர கோடை கால தூய்மை இந்தியா பயிற்சி முகாமில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்குமாறு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அழைப்பு

100 மணி நேர கோடை கால தூய்மை இந்தியா பயிற்சி முகாமில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்குமாறு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அழைப்பு விடுத்துள்ளார்.

மே 1 ஆம் தேதி முதல் ஜுலை 31 வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாம் இளைஞர்களின் திறனை மேம்படுத்தி துப்புரவு சார்ந்த பணிகளில் ஈடுபட செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு வரும் 15 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் கிராமப்புறத்தில் அவர்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்து 100 மணி நேரம் தனியாகவோ அல்லது குழுவாகவோ தூய்மைப் பணி மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையை இணையதளம் வாயிலாக அனுப்ப வேண்டும். அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து பரிசுக்குரியதை தேர்வு செய்வார்கள். தூய்மைப் பணியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். 10 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.