டிரம்ப் அதிரடி அறிவிப்பு ..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , வடகொரியா அதிபர் உடனான பேச்சுவார்த்தை தள்ளிப் போகக் கூடும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , வடகொரியா அதிபர் உடனான பேச்சுவார்த்தை தள்ளிப் போகக் கூடும் என தெரிவித்துள்ளார்.

ஜூன் 12ஆம் தேதி வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் சிங்கப்பூரில் சந்திப்பு நிகழும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுக்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளதாகவும், அவை நிறைவேறினால் மட்டுமே திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியுள்ளார்.

ஒரு வேளை பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறாவிட்டாலும், வேறு ஒரு நாள் நிச்சயம் நடக்கும் எனக் கூறியுள்ளார். அதே வேளையில் இருநாட்டு அதிபர்களின் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.