குஜராத் மாநிலத்தில் கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். சோட்டா உதய்பூர் மாவட்டத்தின் ரங்பூர் ((Rangpur)) பகுதியில், இன்று காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே அதிவேகத்தில் வந்த டேங்கர் லாரி, கார் மீது மோதியது. இதில், கார் அப்பளம்போல் நொறுங்கியதுடன், காரில் இருந்த 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, டேங்கர் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது