டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்..!

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்குத் தடைவிதிக்கக் கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்குத் தடைவிதிக்கக் கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதை எதிர்த்துச் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது.

இதையடுத்து 51கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கத் தமிழக அரசு சார்பில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்குத் தடை விதிக்கக் கோரி டிராபிக் ராமசாமி சார்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்டியலிடப்பட்ட வழக்குகளின் முடிவில் இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது