.
சீனா நாட்டின் ஜிங் சூ பிராந்தியத்தின் நான்ஜிங் நகரைச் சேர்ந்த சூ ஹூவான் என்பவரின் கண்டுபிடிப்பான 3 டி புரோஜெக்டர் மூலம் முப்பரிமாண காட்சிகளை பிரத்யோக கண்ணாடி இன்றி காண முடியும்.
unknown nodeசுழலும் கட்டிட முத்திரைகள், மீன், பறவை, பூக்கள் என ஓராயிரம் உருவங்களை வெகு எளிதாக கையடக்க கருவி மூலம் கண் முன் காட்டுகிறார் சூ ஹூவான். கம்யூட்டர் மூலம் கட்டுப்படுத்தப்படும் நூறாயிரம் எல்.இ.டி விளக்குகள் அடங்கிய ஒரு விசிறி மூலம் காட்சிகள் வெளியாகின்றன.
வேகமாக சுழலும் விசிறியில் இருந்து வெளியாகும் ஒளிக்கற்றையில் மில்லி செகண்டுக்கு ஒரு முறை காட்சிகளை மாற்றுவதன் மூலம் முப்பரிமாண காட்சிகளை காட்ட முடிவதாக சூ ஹூவான் தெரிவித்துள்ளார்.