உங்கள் ஸ்மார்ட்போனை பாதிக்கும் 5அப்கள் இதோ..!

சமீபத்தில், கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி 2017 மறுஆய்வு அறிக்கை வெளியிட்டது.இந்த அறிக்கையில் வழங்கப்பட்ட தகவல்களில், பிஎச்ஏ எனப்படும்

சமீபத்தில், கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி 2017 மறுஆய்வு அறிக்கை வெளியிட்டது.இந்த அறிக்கையில் வழங்கப்பட்ட தகவல்களில், பிஎச்ஏ எனப்படும் பொடென்ஷியல் ஹார்ம்புல் ஆப்ஸ் (Potentially Harmful Apps) பற்றிய விவரங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டில், சுமார் 60.3% தீங்கு விளைவிக்கும் பயன்பாடுகள் (PHA) ஆனது, இயந்திர கற்றல் (மெஷின் லேர்னிங்) வழியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கூகுளின் மெஷின் லேர்னிங் சேவையானது, Google Play Protect என 2 பில்லியன் சாதனங்களில் செயல்படுத்தப்பட்டது. பின்னர் அது, ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில் நிகழும் தீங்கிழைக்கும் செயல்பாடுகளை தொடர்ந்து ஸ்கேன் செய்து, அவைகளில் அபாயகரமான மற்றும் தனியுரிமை-ஆக்கிரமிப்புகளை நிகழ்த்தும் சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை பட்டியலிட்டுள்ளது; அந்த ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை உடனடியாக டெலிட் செய்வது நல்லது.!

01. குட் வெதர் ஆப் (Good Weather app) :

unknown node

ESET வலைப்பதிவின் படி, இந்த குறிப்பிட்ட ஆப்பை ஹேக்கர்கள் ஒரு ட்ரோஜன் (trojan) ஆக பயன்படுத்துகின்றன. அதாவது, Trojan.Android/Spy.Banker.HUஎன்கிற பேங்கிங் மால்வேர் வழியாக உங்களின் போன் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறது. ஒருமுறை இந்த ஆப் டவுன்லோட் செய்யப்பட்ட பின்னர், உங்கள் ஸ்மார்ட்போனின் லாக், அன்லாக், டெக்ஸ்ட்களை இடைமறிப்பு செய்வது போன்ற கட்டுப்பாடுகளை பெறலாம். கூடுதலாக, பயனரின் வங்கி சார்ந்த தகவல்களையும் அணுக முடியும்.

02. ட்ரா சம்திங் ஃப்ரீ (Draw Something Free) :

unknown node

இந்த பயன்பாடானது, தொலைதூர நண்பர்களிடம் விளையாட அனுமதிக்கும் பிக்ஷ்நரியின் ரிமோட் பதிப்பாகும். இதர டெவெலப்பர்கள் வழியாக உருவாக்கம் பெற்ற இந்த ஆப்பின் மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்கள் வழியாக, ஸ்மார்ட்போனில் உள்ள எந்தவொரு ஆப்ஸ்களுக்கான அணுகலும் கிடைக்குமாம். அதாவது, உங்கள் போன் எண், அழைப்பு பதிவு, சிக்னல் தகவல், கேரியர் மற்றும் இன்னும் பல தகவல்களை குறிப்பிட்ட விளம்பரதாரர்களால் அணுக முடியும் என்று அர்த்தம்.

03. கோ லாக்கர் (GO Locker) :

unknown node

உங்கள் ஸ்மார்ட்போன் லாக் ஸ்க்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த ஆப் ஆனது பின்புலத்தில் சில நம்பமுடியாத கட்டுப்பாடுகளை கொண்டுள்ளதென்பதை நீங்கள் அறிவீர்களா.? ஆம், கோ லாக்கர் ஆப் ஆனது, உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் மீதான அணுகலை கொண்டு இருப்பதால், அது உங்கள் டெக்ஸ்ட் மெசேஜ் முதல் உங்கள் லோக்கேஷன் வரையிலாக கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் அணுகும். இது விளம்பரதாரர்களுக்கு வழங்கப்பட மாட்டாது, மூன்றாம் தரப்பு பயன்பாட்டு அங்காடிகளுக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

04. கேமரா 360 (Camera360) :

unknown node

இந்த கேமரா டூல் ஆனது, உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவிற்கான கூடுதல் மோட்ஸ், பிரத்தியேக பில்டர்ஸ், ப்ரீ க்ளவுட் ஸ்டோரேஜ், முக அங்கீகார மென்பொருள், நிகழ் நேர “டச்-அப்கள்” உடன் விளம்பரங்களையும் வழங்கும் ஒரு ஆப் ஆகும். இந்த ஆப்பில் சீனாவின் கூகுள் என்று அழைக்கப்படும் பைடு (Baidu) இன்-பில்ட் ஆக இணைக்கப்பெற்றுள்ளது. அது இந்த ஆப்பை பயன்படுத்தி, உங்கள் WiFi ஐ ஆப் மற்றும் ஆன் செய்யும் வல்லமையை கொண்டுள்ளதாம்.

05. க்ளீன் மாஸ்டர் (Clean Master):

unknown node

சிக்கல் செய்யும் ஆப்ஸ்களை சரி செய்ய மற்றும் கேட்ச் கோப்புகளை உடனடியாக அழிக்க உதவும் க்ளீன் மாஸ்டர் மற்றும் இதே போன்ற மற்ற ஆப்ஸ்கள் வழியாக, பெரிய அளவிலான டேட்டா திருட்டு பாதிப்புகள் இல்லை என்றாலும் கூட, உங்களின் ஸ்மார்ட்போனின் வாழ்நாளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது க்ளீன் மாஸ்டர் போன்றே ஆப்ஸ்கள் ஆனது, பயன்பாட்டின் போது, உங்கள் பேட்டரியை பலவீனமாக்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நாளடைவில், உங்களின் பேட்டரி திறன் ஆனது அரை மணி நேரம் கூட தாக்குபிடிக்காமல் போகலாம்.