திருப்பதியில் பரபரப்பு..!இளைஞரை கொலை செய்த இளம்பெண்..!

திருப்பதி கோவிந்தராஜா சுவாமி கோயில் எதிரே உள்ள விடுதியில் கடந்த 4ஆம் தேதி டில்லியைச் சேர்ந்த மோகன் என்பவர் அறை எடுத்துத் தங்கினார். அவருடன் இளம்பெண் ஒருவரும்

திருப்பதி கோவிந்தராஜா சுவாமி கோயில் எதிரே உள்ள விடுதியில் கடந்த 4ஆம் தேதி டில்லியைச் சேர்ந்த மோகன் என்பவர் அறை எடுத்துத் தங்கினார். அவருடன் இளம்பெண் ஒருவரும் தங்கியிருந்தார். நேற்று இரவு அறையை காலி செய்து விட்டு சென்றவர்கள், ரயில் கிடைக்கவில்லை என்றும், நாளை காலை வரை தங்கிச் செல்வதாக கூறி மீண்டும் அதே விடுதிக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் அறையில் இருந்த இளம் பெண் மட்டும் வெளியில் சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, மோகன் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அறையில் இருந்த தடையங்களை சேகரித்து இளம்பெண் குறித்து, 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்