விமானகட்டணங்களுக்கான உச்சவரம்பை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், தேவை அதிகரிக்கும் போது விமான நிறுவனங்கள் 10 மடங்கு அதிகமான கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சமீத்பத்தில இண்டிகோ நிறுவனத்தின் A320N ரக விமானங்கள் என்ஜின் கோளாறால் மொத்தமாக பறக்க தடை விதிக்கப்பட்ட போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. நியாயமான அளவுக்கு மேல் கட்டணத்தை உயர்த்தாமலிருக்க உச்சவரம்பு நிர்ணயிக்கவும் மனுவில் கோரப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்