அரசு ஆஸ்பத்திரியில் தந்தையின் சிகிச்சைக்காக குளுக்கோஸ் பாட்டிலை சிறுமி கையில் பிடித்தவாறு நின்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
unknown nodeஅவுரங்காபாத் மாவட்டம் குல்தாபாத் தாலுகா பட்ஜியை சேர்ந்தவர் ஏக்நாத் கவாலி. இவர் அவுரங்காபாத் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
unknown nodeஇதைத்தொடர்ந்து அவருக்கு நரம்பு ஊசி மூலம் குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.ஆனால் அப்போது ஆஸ்பத்திரியில் குளுகோஸ் பாட்டிலை தொங்கவிடும் சாதனம் பற்றாக்குறையாக இருந்ததால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஏக்நாத்தின் 9 வயது மகளிடம் அந்த குளுக்கோஸ் பாட்டிலை கொடுத்து அதை பிடித்தபடி நிற்குமாறு கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து சிறுமி தனது தந்தை சிகிச்சை பெறுவதற்காக குளுக்கோஸ் பாட்டிலை அரை மணி நேரத்துக்கு கையில் தூக்கிப்பிடித்தபடி நின்றுள்ளார்.
ஆஸ்பத்திரியின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆஸ்பத்திரியின் டீன் டாக்டர் கண்ணன் எடிகர், ‘சிறுமி கையில் குளுக்கோஸ் தாங்கி நின்ற சம்பவம் உண்மைதான். ஆனால் அவர் சில நிமிடங்களே அவ்வாறு நின்றார். அதற்குள் குளுக்கோஸ் பாட்டில் தாங்கிகள் கொண்டுவரப்பட்டு அனைத்தும் சரிசெய்யப்பட்டன.
இருந்தாலும் சிறுமியை அவ்வாறு நிற்க வைத்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது’ என தெரிவித்தார்.