மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மணிமண்டபம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வெற்றிகள், சினிமா பயணங்கள், அரசியல் நகர்வுகள், ஆட்சியின் சாதனைகளை விளக்கம் கண்காட்சியை அமைக்கவும், திட்டமிட்டுள்ளனர். அதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நினைவு மண்டபம் பீனிக்ஸ் பறவை போல் இந்த மண்டபம் அமைக்கப்படவுள்ளது.
unknown nodeஜெயலலிதா முன்னாள் முதலமைச்சராக பதிவியில் இருந்தாலும், அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான குற்றவாளி, ஊழல்வாதி, எனவே அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்படுவதற்கு எதிர்க்கட்சிகள், அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
unknown nodeகுற்றவாளியான ஜெயலலிதா இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், முதலமைச்சராக இருந்திருக்க மாட்டார். குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட அவர், பெங்களுரு பரப்பன அக்ரகார சிறையில் தண்டனை அனுபவித்து வந்திருப்பார், என்பது நிதர்சனம். அவருடன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்களுக்கு சிறை, ஜெயலலிதாவிற்கு மட்டும் மணிமண்டபமா? என்பது நெட்டிசன்களின் குரல்!
unknown nodeஜெயலலிதாவிற்காக மணிமண்டபம் அமைப்பது மற்ற நல்ல தலைவர்களையும், அவர்களுக்காக எழுப்பப்பட்ட நினைவு சின்னங்களையும் அவமதிப்பதாகவே அமையும். மக்களும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஊழல் சின்னமாகவே இதை பார்ப்பார்கள் என்கிறார் ராமதாஸ்.
unknown nodeஜெயலலிதாவின் உருவ படத்தை சட்டப்பேரவையில் திறப்பதற்கும், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ. சிலை நிறுவியதற்கும் அரசியல்வாதிகளின் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் மக்கள் தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
‘மக்களால் நான். மக்களுக்காகவே நான்’என கர்ஜித்த புரட்சி பெண், உண்மையில் மக்களின் நலனுக்காக மட்டும் தான் உழைத்தாரா? நிர்வாக திறன், ஆட்சி, கட்சியை கட்டி ஆளும் திறன் உள்ளவர்களுக்கு மண்மண்டபம் அவசியம் தான். ஆனால் பீனிக்ஸ் பறவையாக செதுக்குவதற்கு என்ன பொருள்… நாட்டில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது இதற்காக இவ்வளவு கோடி செலவிட வேண்டுமா?
பீனிக்ஸ் பறவை ஒரு இலட்சிய வாதிப் பறவை. சூரியனைத் தொட வேண்டும் என்பதே அதன் வாழ்க்கை இலட்சியம். சூரியனை நோக்கி பறக்கும் போது குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பின் சூரியனின் அதீத வெப்பம் தாங்க முடியாமல் உடல் கருகி மண்ணில் விழுந்து மீண்டும் உயிர்த்து தொடர்ந்து தனது பயணத்தை தொடருமாம். இதன் ஆயுட்காலம் 500 முதல் 1000 ஆண்டுகள் எனக் கூறப்படுகிறது. கதைகளில் வரும் இதுபோன்ற பறவையை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு, மக்கள் பணத்தில் மணிமண்டபம் கட்டுவது அதிமுகவினருக்கு பெருமையாக இருக்கலாம்!
ஜெ.வுக்கு அமைக்கப்பட்ட சிலையே அவருடைய வடிவத்தில் இல்லை, என பலரும் ஷாக்கான நிலையில், பீனிக்ஸ் வடிவத்தில் அமைக்கப்படும் இந்த மணிமண்டபம், கழுகுபோல் வராமல் இருந்தால் சரி, என்பது நெட்டிசன்களின் மைண்ட் வாய்ஸ்!
சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிகளை காணவும், தலைவர்களின் மணிமண்டபத்தை பார்க்கவும் கூடும் சுற்றுலா பயணிகள், பீனிக்ஸ் மண்டபத்தினால் ஈர்க்கப்படுவார்களா? ஊழல்வாதியின் கரை பீனிக்ஸினால் மறையுமா? மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது இனி வரும் காலங்களில் தெரியும்.