வடகொரியா ,அணு ஆயுதச் சோதனைத் திட்டங்களைக் கைவிட்டதற்கு அமெரிக்காவின் அழுத்தம் காரணமில்லை என தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இப்போதுள்ள மைக் பொம்பியோ, அந்தப் பொறுப்புக்கு வருமுன் அதிபர் டொனால்டு டிரம்பின் பிரதிநிதியாக வடகொரியா சென்று கிம் ஜாங் உன்னுடன் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து அணு ஆயுதச் சோதனைத் தளங்களை மூடிவிட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே வடகொரியா அணுஆயுத ஒழிப்புக்கு இணங்கியதாக அரசியல் வல்லுநர்கள் கருதி வருகின்றனர்.
இதை மறுத்துள்ள வடகொரியா, கொரியத் தீபகற்பத்தை அணு ஆயுதம் அற்றதாக ஆக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை தங்களுக்கு உள்ளதாகவும் அதனாலேயே அணு ஆயுதச் சோதனைத் தளங்களை மூடியதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சி அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கியது போன்று ஒரு தோற்றத்தை அமெரிக்கா உண்டாக்குவதாகவும் வடகொரியா குற்றஞ்சாட்டி உள்ளது