இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
12 வயதுக்கு குறைவான குழந்தைகளை பாலியல் ரீதியாக தாக்கினால் மரண தண்டனை என அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக விரோதிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பெண்கள், இந்து கடவுள் காளி தன்னுடைய கையில் வாள் வைத்திருப்பது போன்று பெண்களும் வைத்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.
பாபுல் சுப்ரியோ பேசுகையில், “அம்மா காளியின் கையில் வாள் அல்லது கதம் இருக்கும், அவர் பயன்படுத்தினாரா? நீங்களும் உங்களுடைய கையில் ஆயுதம் கொண்டிருக்க வேண்டும், இது சமூக விரோத சக்திகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவியாக இருக்கும், அதனை பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது, கையில் வைத்திருந்தாலே போதும்,” என கூறிஉள்ளார். மேற்கு வங்காள மாநிலம் மேற்கு பர்த்வான் மாவட்டம் கான்கேசாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய பாபுல் சுப்ரியோ, சமூக விரோத சக்திகளின் மிரட்டல் இருந்தாலும் உங்களுடைய உரிமைக்காக நீங்கள் போராட வேண்டும், எனவும் குறிப்பிட்டு உள்ளார்