தான் புதிதாக நடிக்கும் படத்தில் சிம்ரன் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து இன்று குழந்தைகள்
unknown nodeமுதல் பெரியவர்கள் வரை கவர்ந்து வைத்துள்ள சிவமான ஹீரோ அடம் பிடித்து வருகிறாராம்.
unknown nodeதொலைக்காட்சிகளில் ஒரு நாள் சூட்டிங்கிற்கு 500 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இந்த ஹீரோவின் படம் தற்போது 50 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் ஆகிறது.
unknown nodeஅந்த அளவிற்கு மார்க்கெட் வேல்யூ இருந்தாலும் அந்த ஹீரோ டேஸ்ட் என்னவோ மிகவும் பழைய நடிகைகளை நோக்கியதாகவே இருக்கிறதராம்.
unknown nodeஅதிலும் சிம்ரன் என்றால் அந்த ஹீரோவுக்கு ரொம்ப பிடிக்குமாம்.
unknown nodeபள்ளியில் படித்த காலத்தில் சிம்ரன் நடித்த படம் என்றால் முதல் நாள் முதல் காட்சியே பார்த்து விடுவாராம்.
unknown nodeஇந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் கிங் என்கிற பொருள் வரும் படத்தில் சிம்ரனுக்கு முக்கியமான வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇதற்கு முழுக்காரணம் அந்த ஹீரோ தானாம். அந்த வேடத்தில் சிம்ரனைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று ஒத்தைக்காலில் ஹீரோ நின்றதால், சிம்ரனை ஒப்பந்தம் செய்தார்களாம்.
unknown nodeஇந்த நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க அந்த ஹீரோ ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திலும் சிம்ரனை நடிக்க வைக்க வேண்டும் என்று அந்த ஹீரோ இயக்குனரை நச்சரித்து வருகிறாராம்.
unknown nodeஹீரோ சொல்லிவிட்டால் என்ன செய்வது சிம்ரனுக்கு என்று ஒரு கேரக்டரையே உருவாக்கும் வேலையில் இயக்குனர் இறங்கியுள்ளாராம்.
சிம்ரனும் ஹீரோவின் விருப்பத்தை புரிந்து கொண்டு உடலை ஸ்லிம்மாக்கி பழைய சிம்ரனாகவே அந்த ஹீரோவுக்கு காட்சி அளித்து வருகிறாராம்.