ஆழ்ந்தகருவிழிப்படல தொற்றுகளுக்கு மருந்து கொடுக்கும் அமைப்புமுறைக்கு ஒரு தனித்துவ புதுமையான தொழில்நுட்பத்தை கையாண்டு வெற்றிகரமாகச் சிகிச்சை புரிந்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை திருநெல்வேலி.
இந்தப் புதுமையான கண்டுபிடிப்பில், கருவிழிப்படலம் வீக்கமடையக்கூடிய ஒரு கண் நிலையான, கருவிழிப்படல அழற்சி தொற்றுடைய ஒரு 45 வயது மின்சாரத்துறை ஊழியருக்கு கருவிழிப்படல உட்பொருத்துதல்புரிந்திருப்பது உலக கண் மருத்துவ வரலாற்றில் முதல் முறையாகும்.
இந்தப் புதுமையான தொழில்நுட்பத்திற்கு, 2017,அக்டோபரில் லிஸ்பனில் நடைபெற்ற மதிப்பிற்குரியஐரோப்பிய கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சை மருத்துவர்கள் (ESCRS) சங்க மாநாட்டில் சிறந்த புதுமைப்படைப்பிற்கு இரண்டு விருதுகள் மற்றும் 2018 ஏப்ரலில், வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சை மருத்துவர்கள் சங்கத்தால் சிறந்த புதிய தொழில்நுட்பத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பெற்றுள்ளது. இந்தப் புதுமை நடைமுறைக்கு அண்மையில் நடைபெற்ற இந்திய கண் மருத்துவ சங்கத்தின் – AIOS 2018, 76-வது ஆண்டு மாநாட்டில் விருதுகள் வழங்கப்பெற்றது.
கருவிழிப்படல தொற்று என்பது, நுண்ணுயிரி மற்றும் பூஞ்சை ஆகிய இரண்டினாலும் கருவிழிப்படலத்தில் ஏற்படுத்தப்படும் சிதைவினால் விளைவிக்கப்படுவதாகும் மற்றும் இது இறுதியில் பார்வையற்ற தன்மைக்கு வழிவகுக்கக்கூடும். இந்தியாவில் ஏறக்குறைய 30%கருவிழிப்படல தொற்றுகள் பார்வையற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை, திருநெல்வேலி, மண்டல மருத்துவ இயக்குநர். டாக்டர். லயனல்ராஜ் அவர்கள் கூறுகையில், “தொற்று கருவிழிப்படல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தற்போது வலுவூட்டப்பட்ட நுண்ணுயிரி எதிர்ப்பு கண் சொட்டுமருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இதை தொடர்ச்சியாக உபயோகிக்க வேண்டும். கண் சொட்டுமருந்துகளின் திறனற்ற மருந்து ஊடுருவல் காரணத்தால், ஆழ்ந்த கருவிழிப்படல திசுக்களில் நுண்ணுயிரி எதிர்ப்பிலின் உயிரி கிடைப்புத்தன்மை குறைவாகும்,” என்றார். திருநெல்வேலி, டாக்டர் அகர்வால் மருத்துவமனை மண்டல இயக்குநர், டாக்டர். லயனல் ராஜ்தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கருவிழிப்படல அல்சருக்கு பயனுகந்த சிகிச்சைக்கு கருவிழிப்படல உட்பொருத்துதல் எனப்படும் ஒரு புதிய மருந்து செலுத்து அமைப்புமுறையை வடிவமைத்தனர்.
இந்த நடைமுறைக்குத் திருநெல்வேலி, டாக்டர் அகர்வால்’ஸ் கண் மருத்துவமனையின் ஒரு அறிவுசார்ந்த சொத்தாக காப்புரிமை பெறப்பட்டுள்ளது.மேலும் டாக்டர். லயனல்ராஜ் கூறுகையில், “மருந்து செலுத்து அமைப்புமுறையில் இந்த புதிய கண்டுபிடிப்பு கண்சொட்டு மருந்துகளின் பக்கவிளைவுகளை குறைத்துள்ளது. இப்போது வரை, இந்த நடைமுறையைக் கொண்டு பத்து நோயாளிக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த நடைமுறையால் மருந்து ஊடுருவு தன்மையில் பயனிறைவு அதிகரித்து அதன்மூலம் பார்வை பாதுகாக்கப்படுகிறது,” என்றார்.வெற்றிகரமாகச் சிகிச்சை பெற்ற 45 வயது மின்சாரத்துறை ஊழியர் திரு. அந்தோனி ராஜ் கூறுகையில், “முன்னதாக நான் கண் சிவந்து, கடுமையான கண்வலியுடன் ஒரு பரிதாபகரமான நிலையில் இருந்தேன். எனக்கு ஒளி உணர்திறனுடன் ஒரு மங்கலான பார்வை இருந்தது. இப்போது சிகிச்சைக்குப் பிறகு, ஒரு சில நாட்களுக்குள் நான் தெளிவான பார்வை மீண்டும் கிடைக்கப்பெற்றேன்