புதுடெல்லியில் அக்பர் ரோடு என்ற வழிகாட்டு பலகையின் மீது கையால் எழுதப்பட்ட, மகாராணா பிரதாப் ரோடு என்ற ஸ்டிக்கர் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ளது. அக்பர் ரோடு என்பது மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், உமா பாரதி, சுரேஷ் பிரபு உள்ளிட்ட அரசியல்வாதிகள் இருக்கும் இடமாகவும், காங்கிரஸ் தலைமையகம் அமைந்துள்ள இடமாகவும் உள்ளது. முக்கிய பகுதியின் பெயர் திடீரென மாற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பெயர் மாற்றப்பட்டு, ஒட்டப்பட்ட வழிகாட்டு ஸ்டிக்கரை அகற்றினர். போஸ்டரை ஒட்டிய மர்ம நபர்கள் குறித்து தகவல் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.