வாரன் பப்பட்டின் வணிகத்துக்குப் போட்டியாக வணிகத்தைத் தொடங்கப்போகும் ஸ்பேஸ் எக்ஸ்..!

வாரன் பப்பட்டின் மிட்டாய் வணிகத்துக்குப் போட்டியாக, தாங்களும் மிட்டாய் வணிகத்தைத் தொடங்கப்போவதாக அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க்

வாரன் பப்பட்டின் மிட்டாய் வணிகத்துக்குப் போட்டியாக, தாங்களும் மிட்டாய் வணிகத்தைத் தொடங்கப்போவதாக அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பெர்க்சயர் ஹாத்தவே நிறுவனத்தின் ஆண்டுக்கூட்டத்தில் பேசிய வாரன் பப்பட், எலோன் மஸ்க் ஒரு மிட்டாய் நிறுவனம் தொடங்கி நடத்திப் பார்க்கட்டும் என சவால் விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள எலோன் மஸ்க்  தான் ஒரு மிட்டாய் கம்பெனி தொடங்கப்போவதாகவும், அது பெருமளவில் வளர்ச்சியடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு வெற்றிகரமான வணிகத்துக்குப் போட்டி வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், போட்டி தான் புதுமைகளை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.