நியூசிலாந்தில் 2 கால்பந்து மைதான அளவுக்கு நிலம் பிளவுபட்டு இருப்பது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
unknown nodeரோட்டர்யூவ (rotorua)வில் உள்ள விவசாய நிலத்தில் 200 மீட்டர் தொலைவுக்கு இந்த புதை குழி தோன்றியுள்ளது.
6 மாடிக் கட்டிடத்தை அமிழ்த்து விடும் அளவுக்கு இதன் ஆழம் அமைந்துள்ளது. இதைப் பார்த்துச் செல்லும் மக்கள் 2012 எனும் ஹாலிவுட் திரைப்படத்தில் பார்த்ததைப் போன்று இருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர் மழை காரணமாக சுண்ணாம்புப் பாறை தளர்வு ஏற்பட்டு நிலம் பிளவுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இங்கு நிலநடுக்கவியல், எரிமலைகள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்