விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் விற்பனை கூட அறையின் மேற்கூறை இடிந்து விழுந்தது..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழங்குமுறை விற்பனை கூட கண்கானிப்பாளர் அறையின் மேற்கூறை திடிரென இடிந்து விழுந்ததால், அலுவலக பணியாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழங்குமுறை விற்பனை கூட கண்கானிப்பாளர் அறையின் மேற்கூறை திடிரென இடிந்து விழுந்ததால், அலுவலக பணியாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இன்று விற்பனை கூட அலுவலகத்தில் ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அலுவலக மேற்கூறையின் ஒரு பகுதி இடிந்து விழந்தது. இதில் அலுவலக உதவியாளர் ஒருவர் தலையில் காயமடைந்தார்.

மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ச்சியடைந்த அலுவலக கண்காணிப்பாளர் இந்திராணி மயக்கமடைந்தார். மற்ற ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு அலுவலகத்தை விட்டு தெறித்து ஓடினர். தரமற்ற கட்டுமானப் பணியால் மேற்கூரை சேதமடைந்ததாகக் கூறும் பணியாளர்கள், கட்டிடத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்