சவூதி அரேபியா அரசின் அதிர வைக்கும் அதிரடி தண்டனை! ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை

சவூதி அரேபியாவில், தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட 37 பேருக்கு அந்த நாட்டு அரசு மரண தண்டனை வழங்கியுள்ளது. இந்த குற்றவாளிகள் தலை துண்டிக்கப்பட்டு

சவூதி அரேபியாவில், தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட 37 பேருக்கு அந்த நாட்டு அரசு மரண தண்டனை வழங்கியுள்ளது. இந்த குற்றவாளிகள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் கூறுகையில், மரண தண்டனை வழங்கப்பட்டவர்கள் அனைவருமே தீவிரவாதத்தில் ஊறிப்போனவர்கள் என்றும் நாட்டில் வகுப்புவாத கொள்கைகளை பரப்பி வன்முறைகளில் ஈடுபட்டு வந்தனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், இவர்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, நாட்டுக்கு பல இன்னல்களை ஏற்படுத்தியவர்கள் என்றும், இந்த தாக்குதலில் பல்வேறு பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.