திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான துறைமுகம் வாயிலாக, சீனாவுக்கு கப்பலில் கடத்தப்படவிருந்த 20 கோடி ரூபாய் செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
ஆந்திராவில் இருந்து, செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டதாகவும், அவை, கப்பல் மூலம் சீனாவுக்கு கடத்தப்பட இருப்பதாகவும், மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கண்காணிப்பு மற்றும் அதிரடி சோதனையில் ஈடுபட்ட வருவாய் புலனாய்வு துறையினர், கண்டெய்னர் ஒன்றை சோதனையிட்டனர். அதில், சீனாவுக்கு கடத்தப்பட இருந்த 20 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 20 கோடி ரூபாய் என மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்