மசாஜ் சென்டர்களில் கொள்ளையடித்த ரவுடிகள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..!

சேலம் மத்திய சிறையில் , மசாஜ் சென்டர்களில் பட்டப்பகலில் புகுந்து கொள்ளையடித்து சம்பவத்தில், கைது செய்யப்பட்ட ரவுடிகள், அடைக்கப்பட்டனர்.

சேலம் மத்திய சிறையில் , மசாஜ் சென்டர்களில் பட்டப்பகலில் புகுந்து கொள்ளையடித்து சம்பவத்தில், கைது செய்யப்பட்ட ரவுடிகள், அடைக்கப்பட்டனர்.

இவர்கள், கொள்ளைக்குப் பயன்படுத்திய இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சேலம், பள்ளப்பட்டி, அழகாபுரம், அஸ்தம்பட்டி ஆகிய காவல்நிலைய பகுதிகளில் உள்ள 3 மசாஜ் சென்டர்களில், 15க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் பட்டப்பகலில் புகுந்து, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.. மேலும், மசாஜ் சென்டர்களில் பணியாற்றிய இளம்பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.. இதுதொடர்பாக, சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கரிடம் புகார் அளிக்கப்பட்டது..

இதையடுத்து, சேலம் பெரமனூர் பிரகாஷ், முள்ளுவாடி கேட் குணசேகரன், பிரகாசம் நகர் விமல், மணக்காடு சங்கர், ராஜாராம் நகர் டேவிட் ஆகிய ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். கோவில் திருவிழாவில் பங்கேற்று செலவு செய்யவும், மதுபானம் அருந்தவுமே, மசாஜ் சென்டர்களில் நுழைந்து கொள்ளையடித்ததாக, கைது செய்யப்பட்ட ரவுடிகள் தெரிவித்தனர்