படிப்பறிவே இல்லாத ரஜினிகாந்துடன் கூட்டணி வைத்தால் எல்லாம் நாசமாக போய்விடும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறிய கார்டுது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறி அதற்கான பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் .
unknown nodeஇந்நிலையில் ஆடிட்டரும் துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி தமிழ்நாட்டில் வெற்றிடம் இருப்பதாகவும் ரஜினிகாந்த் மோடியுடன் இணைந்தால் அவருக்கு வெற்றி நிச்சயம் எனவும் கூறினார்.
மேலும் சில நாட்களாக ரஜினிகாந்தை எதிர்த்து சுப்ரமணிய சுவாமி தவறான கருத்துக்களை கூறி வருகிறார்.
unknown nodeஅதுமட்டுமின்றி தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ். தத்துவவாதி அல்ல. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அப்படி ஒரு போஸ்ட்டே இல்லை; வேண்டுமானால் ரஜினிகாந்துக்கு பி.ஆர்.ஓ. என கூறலாம் என கிண்டலடித்திருந்தார்.
மேலும் இந்த மாதிரி ஆட்களுடன் யாராவது கூட்டணி வைத்தால் எல்லாமே நாசமாய்தான் போகும் என கூறியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.இவரது கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.